1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (18:20 IST)

நாள் ஒன்றுக்கு 2ஜிபி 3ஜிபி; அசத்தும் ஜியோவின் புதிய ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.509 மற்றும் ரூ.799 திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2ஜிபி மற்றும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது.

 
ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகியவை தொடர்ந்து புது புது சலுகைகளை அறிவித்து வருகின்றன. டேட்டாவை முக்கியத்துவமாக வைத்து வாடிக்கையாளர்களை கவர பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.
 
அதன்படி ஜியோ தற்போது நாள் ஒன்றுக்கு 2ஜிபி மற்றும் 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  ரூ.509க்கு 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 49 நாட்களாக ஆகும். ரூ.799க்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்களாக ஆகும்.