ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2017 (10:58 IST)

ஐடியாவின் சய்லெண்ட் ப்ளான்!!

ஜியோவின் வருகைக்கு பிறகு தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மற்ற நிறுவனங்கள் அடிக்கடி சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ஐடியா நிறுவனம் சத்தமின்றி அடுத்த திட்டத்தை வெளியிட்டுள்ளது. 
 
​ஐடியா நிறுவனம், ரூ.197 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அதே போல் இரண்டு புதிய கட்டண திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஐடியா காம்போ திட்டத்தில் மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. 
 
ஐடியா காம்போ திட்ட மாற்றம்: 
 
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வழங்கப்பட்ட ரூ.498 திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் என 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதன் வேலிடிட்டி 77 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இரண்டு புதிய ப்ளான்: 
 
ரூ. 449: 
அன்லிமிட்டெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ், 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகமாகியுள்ளது. இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
ரூ. 529:
அன்லிமிட்டெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகமாகியுள்ளது. இது கேரள மாரிலத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.