வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2017 (21:49 IST)

குட்டையை குழப்பும் ஜியோ மற்றும் ஏர்டெல்: குழப்பத்தில் டிராய்!!

ரிலையன்ஸ் ஜியோ மீது ஏர்டெல் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.


 
 
தொலைபேசி அழைப்பை இணைக்கும் கட்டண விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோ தவறான தகவலை பரப்புவதாக ஏர்டெல் புகார் தெரிவித்துள்ளது. 
 
சில மாதங்களுக்கு முன்னர் ஜியோ, ஏர்டெல் நிறுவனம் மற்ற தொலைபேசி நிறுவனங்களின் அழைப்பை இணைக்கும் கட்டணத்தில் வரும் லாபத்தை மறைத்து வருவதாக புகார் அளித்தது.
 
இதானால், ஏர்டெல் நிறுவனம் டிராயிடம் ஜியோ தவரான புகார்களை வழங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அவப்பெயரை உருவாக்கி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளது.
 
இதற்கு, தொழில் போட்டி காரணமாக ஏர்டெல் இந்த புகாரை அளித்திருக்கிறது என்று ஜியோ விளக்கமளித்துள்ளது. எனவே, இந்த புகார்களை குறித்த சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் டிராய் குழப்பத்தில் உள்ளது.