திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 அக்டோபர் 2017 (16:09 IST)

வோடபோன், ஐடியா மாஸ்டர் ப்ளான்: ஆப்பு ஜியோவுக்கா? ஏர்டெல்லுக்கா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மாதம் ஜியோ போனை அறிமுகம் செய்தது. இதனோடு சில சலுகைகளையும் அளித்தது.


 
 
இலவச 4G ஜியோ மொபைலை ரூ.1500 வைப்பு தொகையாக கொடுத்து வாங்கலாம். மூன்று ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு போனை திருப்பி கொடுத்து வைப்பு தொகையை திரும்பப் பெறலாம் என அறிவித்தது. 
 
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் ரூ.1399 விலையில் கார்பன் A40 India என்ற 4G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
 
தற்போது ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஜியோ மர்றும் ஏர்டெல்லுக்கு போட்டி கொடுக்கும் வலையில் மலிவு விலை ஸ்மார்ட்போன் அளிக்க திட்டமிட்டுள்ளன. 
 
இதற்காக, லாவா மற்றும் கார்பன் உள்ளிட்ட மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இரு நிறுவனங்களும் நடத்தி வருகின்றனவாம்.