கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?
கிழிந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் சிலர் கஷ்டப்படுவர். இவ்வாறான ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
எப்படி மாற்றுவது?
# அனைத்து வங்கிகளும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
# குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.
# பயன்படுத்த முடியாத ரூபாய் வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகள்:
# மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது.
# ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது.
# ரூபாய் நோட்டுகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ கருதப்பட்டால் வங்கிகள் அதனை ஏற்க மறுக்கும்.