1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:09 IST)

ஏ.டி.எம்-ல் பணத்தட்டுப்பாடு - ரூ.500 நோட்டை அதிகமாக அச்சிட முடிவு

நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாட்டை சரிகட்ட 500 ரூபாய் நோட்டை அதிகமாக அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
இன்று காலை முதல்வர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற புகார் எழுந்தது.  முதலில் ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த பணத்தட்டுப்பாடு போகப்போக இந்தியா முழுக்க பரவியது. எனவே, மீண்டும்  பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்கிற பதட்டமும் நிலவியது.
 
குறிப்பாக ஆந்திரா, பீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா,டெல்லி, உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம் மையங்களில் பணத்தட்டுப்பாடு நிலவியது. தமிழகத்திலும் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க  முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர்.

எனவே, இதை சரிகட்ட 500 ரூபாயை 5 மடங்கு கூடுதலாக அச்சிட்டு புழக்கத்தில் விட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முடிவெடுத்துள்ளது.