வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (15:33 IST)

கேலக்ஸி Fold 2: அடுத்த ரவுண்டுக்கு ரெடியான சாம்சங்!!

கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்களையும், சிறப்பம்சங்களையும் கொண்ட மொபைல் போன்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டாட மடிக்க கூடிய ஃபோல்ட் மாடல் போன்களை வெளியிட போவதாக சில மாதங்கள் முன்பே சாம்சங் நிறுவனம் அறிவித்திருந்தது.
 
முதல்முறையாக 12 ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகியுள்ள இந்த மொபைல் 7.3 இன்ச் நீளமும், 4.6 இன்ச் அகலமும் கொண்டது. 512 ஜிபி இண்டர்னல் மெமரி வசதி உள்ளது இதன் சிறப்பம்சம். பின்பக்கம் 16 எம்.பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமராக்களும் உள்ளன. முன்பக்கம் செல்பி எடுக்க 10 எம்பியில் கேமரா உள்ளது. இந்த கேலக்ஸி ஃபோல்ட் மொபைலின் விலை 1,64,999 ரூபாய். 
 
இதன் அமோக வரவேற்பிற்கு பின்னர் தற்போது கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.