வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 மே 2020 (15:39 IST)

அதிரடியாக விலை குறைந்தது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான போது ரூ. 12,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஜிஎஸ்டி அதிகரிப்பு காரணமாக இதன் பிலை ரூ. 14,222 ஆக மாற்றப்பட்டது. 
 
தற்போது விலை குறைக்கப்பட்டு கேலக்ஸி எம்21 4ஜிபி + 63 ஜிபி ரூ. 13,199 ஆக உள்ளது. அதோடு, கேலக்ஸி எம்21 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,499 ஆக உள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி எம்21 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
# 4 ஜிபி LPDDR4x ரேம்,  64 ஜி.பி. / 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்