திவாலான பிரபல துணிக்கடை: 178 ஸ்டோர்களுக்கு மூடு விழா!

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (11:53 IST)
(Forever 21) என்ற பிரபல துணிக்கடை நிறுவனம், திவாலாகி உள்ளது. விரைவில் இக்கடையின் பல ஸ்டோர்கள் மூடப்பட உள்ளது. 
 
57 நாடுகளில், 800-க்கும் அதிகமான ஸ்டோர்களை கொண்ட ஃபார்எவர் 21 என்ற ஆடை நிறுவனம் திவாலாகியுள்ளதாக தெரிகிறது. பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது ஃபார்எவர் 21 இணைந்துள்ளது. 
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்நிறுவனம் அங்கு மட்டுமின்றி சர்வதேச அளவில் பிரபலமான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது திவாலாகி உள்ளது. 
 
இதனால் இந்த நிறுவனத்தின் 178 ஸ்டோர்கள் விரைவில் மூடப்பட உள்ளது. ஃபார்எவர் 21 வரிசையில் பார்னிஸ் நியூயார், டீசல் USA, ஷூசோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் திவாலாகி உள்ளது என்பது கூதல் தகவல். 


இதில் மேலும் படிக்கவும் :