1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (12:59 IST)

சென்னையில் Mi ஹோம் ஸ்டோர் திறப்பு!

சியோமி நிறுவனத்தின் ஐந்தாவது Mi ஹோம் ஸ்டோர் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. 


 

 
சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பு நிறுவனமான சியோமி உலகம் முழுவதும் தனது நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவில் ரெட்மி போன்கள் என்றால் அனைவரும் தெரியும். ஆன்லைன் மூலம் வாங்கக்கூடிய சியோமி மொபைல் போன்கள் தற்போது Mi ஹோம் ஸ்டோரிலும் கிடைக்கும்.
 
இந்தியாவில் முக்கிய பெருநகரங்களில் இந்த Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இந்தியாவின் இந்தாவது Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி ஃபோரம் மாலில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 100 Mi ஹோம் ஸ்டோர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.