வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (15:40 IST)

ஜிஎஸ்டி: ஒரு மாதத்தில் வசூலான வரி பணம் எவ்வளவு தெரியுமா??

கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி-யின் மூலம் முதல் மாத வரி வருவாய் எவ்வளவு வசூலாகியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


 
 
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்தில் வரி வசூல் ரூ.92,283 கோடி என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுமார் 59.57 லட்ச மக்கள் ஜூலை மாதத்துக்கான வரித்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 64.4% வரி செலுத்தப்பட்டுள்ளது. 
 
மொத்த வரி வசூல் தொகையான ரூ.92.283 கோடியில், ரூ.14,894 கோடி மத்திய அரசுக்கு வந்த ஜிஎஸ்டி வரி தொகை, ரூ.22,722 கோடி மாநில அரசுக்கு வந்த ஜிஎஸ்டி வரி தொகை, ரூ.47,469 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி தொகை என் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஜிஎஸ்டி அமல்படுத்தும் போது ரூ.91,000 கோடி வரி பணம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.92,283 கோடி வசூலாகியுள்ளது. இந்த வசூல் தொகை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது.