இந்திய வீரர்கள் எவருக்கும் கிடைக்காதது கோலிக்கு மட்டும் எப்படி??


Sugapriya Prakash| Last Modified சனி, 19 ஆகஸ்ட் 2017 (12:17 IST)
சர்வதேச ஒருநாள் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

 

 
 
இதில், சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தனது முதலிடத்தில் விட்டுக்கொடுக்காமல் உள்ளார். 
 
அந்த பட்டியலில் அதிர்ச்சி தரும் தலவல் என்னவென்றால், இதில் வேறு எந்த இந்திய வீரரும் டாப்-10-ல் இடம் பெறவில்லை என்பதுதான்.
 
முன்னாள் கேப்டன் தோனி, தவான், ரோகித் சர்மா ஆகியோர் முறையே 12, 13, 14-வது இடத்தில் உள்ளனர். சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் ரவிந்திர ஜடேஜா 13 வது இடத்தில் உள்ளார்.
 
சிறந்த பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 13 வது இடத்திலும், அக்‌ஷர் படேல் 20 வது இடத்திலும்,  அஷ்வின் 21 வது இடத்திலும், அமித் மிஸ்ரா 22 வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :