வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:16 IST)

அய்யோ அது அவரில்லை; பதறிய இளம்நடிகை

சினிமா துறையில் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணம் நடிகர் திலீப் இல்லை என மலையாள நடிகை பாமா கூறியுள்ளார்.


 

 
கேரளாவைச் சேர்ந்த் நடிகை பாமா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பட வாய்ப்புகள் குறைய சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர்தான் காரணம் என கூறியிருந்தார். அப்போது மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் சிலரின் பட வாய்ப்புகளை நடிகர் திலீப் கெடுத்ததாக புகார் எழுந்தது.
 
பாமா பேட்டியில் பெயரை செல்லாமல் இருந்தது நடிகர் திலீப்பை பற்றிதான் என பலரும் பேச தொடங்கிவிட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை பாமா ஃபேஸ்புக்கில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 
பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தான் கூறியது நடிகர் திலீப் இல்லை என தெரிவித்துள்ளார். இனி மலையாளத்தில் நடிகைகள் சினிமா துறையில் அவர்களுக்கு உள்ள பிரச்சனை குறித்து பேசினால், அந்த பிரச்சனைக்கு காரணம் நடிகர் திலீப் தான் என்று பேச தொடங்கிவிடுவார்கள்.