ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோல்விதான்; ஒப்புக்கொண்ட நிதியமைச்சகம்
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் சிறந்த நபர்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களது முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்று நிதியமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை புதுப்பித்து மெறுகேற்றும் பணிகளையும் செய்து வருகிறது.
இன்போசிஸ் உருவாக்கிய ஜிஎஸ்டிஎன் பயன்பாட்டின் கீழ்தான் ஜிஎஸ்டிஎன் பதிவு, ரசீதுகள் பதிவேற்றுவது, வரி தாக்கல் மற்றும் பணம் செலுத்துவது போன்ற சரக்கு மற்றும் சேவை வரியின் அனைத்து செயல்பாடுகளும் இயங்கி வருகிறது.
ஜிஎஸ்டி முறை குறைந்த காலகட்டத்திற்குள் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, எனவே தொழில்நுட்பத்தினை முழுமையாகத் தயார் செய்வதற்கு போதுமான நேரம் இல்லை.
ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அனைத்து முயற்சிகளும் இன்று வரை தோல்வியிலேயே முடிந்து வருகிறது என்று நிதி அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் ஜிஎஸ்டி வரி முறை தோல்வி என்று குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது ஜிஎஸ்டி தொழில்நுட்பம் தோவியில்தான் உள்ளது.