1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஏப்ரல் 2018 (11:49 IST)

ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: இது புதுசு...

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டி அதிக அளவில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் சலிக்காமல் சலுகைகளை வழங்கி வருகின்றன.
 
அந்த வகையில் இந்த மூன்று நிறுவனமும் சமீபத்தில் வழங்கியுள்ள சலுகையின் வித்தியாசங்களை இங்கு காண்போம்...
 
ஜியோ: 
ஜியோ ரூ.251 சலுகையை ஐபிஎல் 2018 கிரிகெட் தொடரை முன்னிட்டு அறிவித்தது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 51 நாட்கள்.
 
ஏர்டெல்: 
ஏர்டெல் வழங்கும் ரூ.249 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. 
 
வோடபோன்:
வோடபோன் ரூ.255 சலுகையில், தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.
 
சலுகை திட்டத்தில் டேட்டா ஒரே அளவில் வழங்கப்பட்டாலும், வேலிடிட்டி நாட்களும், விலையும் மாறுபடுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, ஜியோ சலுகை சிறந்ததாக கருதப்படுகிறது.