ரூ.3-க்கு 1 ஜிபி: ஏர்டெல் புது கணக்கு!

Last Updated: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:39 IST)
ஏர்டெல் ஒரு புது கணக்கு போட்டி வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி 3 ரூபாய்க்கு வழங்கவுள்ளது. இது மட்டும் இன்றி இந்த திட்டத்தை போன்று மேலும் சில திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 
 
ஏர்டெல் ரூ.499 சிறப்பு சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
82 நாட்கள் இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதாவது மொத்தம் 164 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கணக்குப்படி ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு ஜிபி டேட்டா ரூ.3-க்கு வழங்கப்படுகிறது. 
அதேபோல், ரூ.448 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா 82 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.509 சலுகையில் பயனர்களுக்கு 1.4 ஜிபி டேட்டா சுமார் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ஐபிஎல் போட்டிகளுக்காக ஏற்கன்வே ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக பல சேவைகள் வழங்கியபோதும், மேலும் இது போன்ற சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொண்டு வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :