வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2017 (11:16 IST)

வங்கிகளை குறைக்கும் திட்டத்தில் அதிரடியாக களமிறங்கிய மத்திய அரசு

வங்கிகளை குறைக்கும் திட்டத்தில் அதிரடியாக களமிறங்கிய மத்திய அரசு
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.


 

 
நாட்டில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளை 15 வங்கிகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது மத்திய அரசு. 
 
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் கிளை வங்கிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஒற்றை வங்கியாக செயல்பட துவங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வங்கிகளின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்டேட் பாங்க் வங்கி ஊழியர்களை குறைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது.
 
இதேபோல் தற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் மற்ற வங்கிகளை கைப்பற்ற முடிவு செய்துள்ளது. மத்திய அரசு இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் தொகையை வங்கித்துறையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.