1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (08:12 IST)

லாக்கரில் வைக்கும் நகைகள் தொலைந்தால் வங்கி பொறுப்பேற்காது. ரிசர்வ் வங்கி

வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை வைத்து அவை காணாமல் போனால் வங்கி பொறுப்பேற்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 


வழக்கறிஞர் ஒருவர் வங்கி லாக்கரில் வைக்கும் பொருட்களின் பாதுகாப்பு குறித்து தகவல் அறியும் உரிமம் சட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு வந்த பதிலில் 'வங்கி லாக்கர் தொடர்பாக எந்தவொரு குறிப்பிட்ட சட்டங்களும், விதிகளும் இல்லை பொதுத்துறை வங்கிகளும் எந்தவொரு பொறுப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ மற்றும் கனரா வங்கி உள்பட 19 வங்கிகள் வழங்கிய பதிலில், "வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் கொண்டுள்ள உறவு" லாக்கர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையில் உள்ளது போன்றது என்றும் எனவே லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தான் அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு முழு பொறுப்பு என்றும் வங்கி எந்த விதத்திலும் அதற்கு பொறுப்பு ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே லாக்கரினால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் இதற்கு பதிலாக வீட்டிலேயே பாதுகாப்புடன் பொருட்களை வைத்து கொள்ளலாம் என்றும் அந்த வக்கீல் தெரிவித்துள்ளார்.