1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Central government announced new plan to get passport within 4 days for Rs.155

நான்கே நாட்களில் பாஸ்போர்ட்... வெறும் 155 ரூபாயில்...

நான்கு நாட்களில்
விண்ணப்பித்த நான்கு நாட்களில், ரூ.155 செலுத்தி பாஸ்போர்ட் பெறலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.


 
 
விண்ணப்பிக்கும் அனைவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர் (I-Annexure) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 
 
பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக மொபைல் போலீஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இத்திட்டம் ஒருமாதக் காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் ரூ.155 செலுத்த வேண்டும்.
 
இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வீட்டில் புலி, வெளியில் எலி: நீதிமன்றத்தில் சரணடைந்த கர்நாடகா!