செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (16:09 IST)

பிஎஸ்என்எல், ஜியோவில் கொரோனா அலர்ட் காலர் ட்யூன்! – மக்கள் வரவேற்பு!

பிஎஸ்என்எல், ஜியோவில் கொரோனா அலர்ட் காலர் ட்யூன்! – மக்கள் வரவேற்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

அதன்படி ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் எண்களுக்கு அழைத்தால் கொரோனா குறித்த செய்தி ஒலிக்குமாறு செய்யப்பட்டுள்ளது. இருமலுடன் தொடங்கும் அந்த குரலில் கொரோனா பரவாமல் இருக்க கைகளை கழுவுவது, இறுமும்போது முகத்தை மூடிக் கொள்வது போன்ற ஆலோசனைகள் கூறப்படுகிறது.

மேலும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய காலர் ட்யூன் வழி விழிப்புணர்வை மக்கள் வரவேற்றுள்ளனர்.