1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (11:47 IST)

ரூ.99 முதல் ரூ.399 வரை பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்!

பிஎஸ்என்எல் தனது பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய சேவைகளை அறிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் இந்த புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என தெரிகிறது.
 
ரூ.99 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.399 வரை சேவைகள் கிடைக்கிறது. கட்டணங்களுக்கு ஏற்ப மாதம் 45 ஜிபி-ல் துவங்கி அதிகபட்சம் 600 ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது.
 
பி்எஸ்என்எல் துவக்க சலுகைகள் 45 ஜிபி டேட்டா என தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 150 ஜிபி சலுகை ரூ.199 விலையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
300 ஜிபி மற்றும் 600 ஜிபி டேட்டா முறையே ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் தினமும் முறையே 10 ஜிபி மற்றும் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
பிஎஸ்என்எல் புதிய சலுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் குறைக்கப்படும்.
 
இது விளம்பர சலுகை என்பதால் 90 நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும், 6 மாதத்திற்கு பிறகு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.