திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 24 மே 2018 (11:15 IST)

பிஎஸ்என்எல் vs ஜியோ vs ஏர்டெல்: சிறந்த டேட்டா ஆஃபர் எது?

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதுய ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. இதே போல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கியுள்ளன. அவற்றில் எது சிறந்தது என பார்ப்போம்... 
 
பிஎஸ்என்எல் ரூ.499 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 45 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 
 
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.509 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா என மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒதோடு இலவச வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வழங்கபப்டுகிறது. 
 
ஏர்டெல் நிறுவனமும் ரூ.499 விலையில் போஸ்ட்பெயிட் சலுகை வழங்கி வருகிறது. மாதம் 40 ஜிபி டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
 
பிஎஸ்என்எல் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் டேட்டா ரோல் ஓவர் வசதி வழங்கப்படவில்லை. பிஎஸ்என்எல் தற்சமயம் அறிவித்துள்ள ரூ.499 சலுகையில் ஜியொவை விட குறைவாக அதே சமயம் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் வழங்குவதை விட அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.