4ஜி VoLTE சேவையில் பிஎஸ்என்எல்: கலக்கத்தில் தனியார் நிறுவனங்கள்!!
தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் 4ஜி VoLTE சேவைகளை துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய சலுகைகளுடன் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.
இணைய சேவைகளுக்காக 700 மெகாவாட் பேன்ட் பயன்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
மேலும், பிராட்பேண்ட் தரத்தை மேம்படுத்தி, சைபர் பாதுகாப்பினை அதிகப்பட்டுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்வதாக தெரிகிறது.