செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (19:22 IST)

ஏர்டெல், ஐடியா போன்று பிஎஸ்என்எல் மொபைல் நம்பர்களும் ரத்து செய்யப்படும்; இதை செய்யாவிட்டால்....

பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிமாற்றத்தின்  பாதுகாப்பை வலுப்படுத்தவும், சிம் கார்டு முறைகேடுகளைத் தடுக்கவும் சில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.


 
 
அதாவது மொபைல் வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணை தங்களது மொபைல் நம்பருடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. 
 
ஏர்டெல் மற்றும் ஐடியா இந்த பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
பயன்பாட்டில் உள்ள பிரிபெய்டு, போஸ்ட்பெய்டு எண்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்களை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திர்குள் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதிக்கு இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்துள்ளது.