1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:14 IST)

அலெக்சாவிற்கு அசிஸ்டண்ட் ஆகும் அமிதாப் பச்சன்??

அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அமேசான் அறிவித்துள்ளது. 
 
ஆம், அலெக்சா சேவையில் அமிதாப் பச்சன் குரல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக அமிதாப் பச்சன் அமேசான் நிறுவனத்துடன் பணியாற்றி வருகிறார். 
 
அமிதாப் பச்சனின் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் சேர்க்கப்பட இருக்கிறது. 
 
இதன் மூலம் பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம்.