இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்த நிறுவனம் புதிய அவதாரம்
இந்தியத் திரை உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இரண்டு புயல்கள் உள்ளனர். ஒருவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். மற்றோருவர் வைகைப்புயல் வடிவேலு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை( ரோஜா 1991) அறிமுகம் செய்தது இயக்குநர் சிகரம் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம்.
கவிதாலயா நிறுவனம் டிவி சீரியல்களையும் படத் தயாரிப்பு வேலைகளையும் இயக்கி வந்த நிலையுயில் ஹார்மோனியம் வித் , ஏ.ஆர் ரஹ்மான் என்ற தொடரை அமேசான் நிறுவனத்திற்காக தயாரித்தது. இதுமிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது டைம் என்ன பாஸ் என்ற வெப் தொடரை கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமேசான்வெளியிட்டுள்ளது. இதில், பரத் ரோபோ சங்கர், அலெக்சாண்டர் பிரியா பவானி உள்ளிட்ரோர் நடித்துள்ளனர். இத்தொடர் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.