ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா.... ஆஃபரில் சிறந்தது எது??


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 7 மார்ச் 2017 (10:20 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், ஐடியா இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன. 

 
 
வோடாபோன்:
 
வோடாபோன் நிறுவனம் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 342 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதம் 28 ஜிபி தரவும், அதில் ஒரு நாளைக்கும் 1 ஜிபி வரம்பு அளிக்கின்றது. 
 
மற்றொரு திட்டத்தில் 346 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு 10 ஜிபி தரவும் வரம்பில்லா குரல் அழைப்புகளும் வழங்குகிறது.
 
ஐடியா: 
 
ஐடியா நிறுவனம் 348 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு வரம்பில்லா குரல் அழைப்புகள் மற்றும் 500 எம்பி இலவச தரவை அளிக்கின்றது.
 
ஏர்டெல்: 
 
ஏர்டெல் நிறுவனம் 349 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 28 ஜிபி தரவு, ஒரு நாளைக்கு 1 ஜிபி என்ற வரம்பு அதிலும் பகலில் 500 எம்பி மற்றும் இரவில் 500 எம்பி தரவாக பிரித்துப் பயன்படுத்த வேண்டும். 
 
போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 13 முதல் பல அதிரடி இலவச சலுகைகளை அளிக்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
 
ஜியோ: 
 
ஜியோ நிறுவனத்தின் இலவச சலுகைகள் முடிவடையும் நிலையில் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு பிரைம் பயனர்களாக மாறலாம் என்று அறிவித்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பில்லா எஸ்எம்எஸ், குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி வரம்புடன் 28 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். 
 
கூடுதல் தரவுக்கு வேண்டும் என்றால் பூஸ்டர் போக்குகளும் உண்டு. 


இதில் மேலும் படிக்கவும் :