1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (06:00 IST)

ரிலையன்ஸ் ஜியோ கொடுக்கும் இலவச போனை எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ வந்த பின்னர் பெரும் புரட்சியே ஏற்பட்டது. அதுவரை 2G மட்டுமே அறிந்த இந்திய வாடிக்கையாளர்கள் 4G என்னும் அதிவேக இண்டர்நெட்டை இலவசமாக பெற்றனர். மிகக்குறுகிய காலத்தில் பத்து கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், அந்த நிறுவனம் தரும் அடுத்தடுத்த சலுகை அறிவிப்புகள் தான்



 
 
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச போன் வழங்கும் திட்டம் ஒன்றை அரிவித்துள்ளது என்பதை நேற்று பார்த்தோம். இந்த ஜியோ போன் என்ற இலவச மொபைலை எந்த கட்டணமும் இல்லாமலேயே முன்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
ரூ.0 விலையில் வழங்கப்படும் இந்த மொபைல் போனை பெறுவதற்கு முதலில் நீங்கள் வைப்புத் தொகையாக ரூ.1500 முதலில் செலுத்த வேண்டும் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மொபைலை திருப்பிக்கொடுத்து முழு தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்
 
இந்த மொபைல் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மொபைலை வரும் ஆகஸ்ட் 24 முதல் புக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜியோ ஷோரூம்களில் நேரில் சென்றும், மை ஜியோ அப்ளிகேஷன் வாயிலாகவும் இந்த இலவச மொபைலுக்கு புக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.