ஆப்படித்த அலிபாபா; அமேசானுக்கு இதுதான் கதி...
ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் உள்ளது. அமேசானில் சுமார் 5 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமேசான் சீனாவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாம். ஆம், கடந்த 2004 ஆம் ஆண்டு சீனாவில் நுழைந்த அமேசானுக்கு, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் கடும் போட்டியாக இருந்தது.
உள்ளூர் பொருட்களை விலைக்கு வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்வதில் குறைந்த செலவில் அலிபாபா சாதித்த காட்டியது. ஆனால், அமேசான் இதில் கோட்டை விட்டது. இதோடு அந்நாட்டை சேர்ந்த ஜேடி.காம் போன்ற நிறுவனங்களும் அமேசானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே, சீனாவிலிருந்து முற்றிலுமாக வெளியேற அமேசான் முடிவு செய்துள்ளது. அதோடு, சீன சந்தை கைகொடுக்காத சூழலில் இனிமேல் முழு கவனமும் இந்தியா மீதுதான் என அமேசான் கூறியுள்ளது.