1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (12:34 IST)

தங்கத்துக்கு தள்ளுபடி, கேஷ்பேக் ஆஃபர்: அமேசானில் அட்சய திருதி ஸ்பெஷல்!!!

அட்சய திருதியை முன்னிட்டு அமேசான் தங்கம் மற்றும் வெள்ளி மீது தள்ளுபடி வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

 
இன்று அட்சய திருதியை நாள். எனவே இன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்பது பலரின் ஐதீகம். எனவே அமேசான் நிறுவனம் தங்கள் மற்றும் வெற்றி நகைகளுக்கு தள்ளுபடி வழங்கியுள்ளது. 
 
நூற்றுக்கும் மேற்பட்ட பிராண்ட், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட டிசைன் நகைகளுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி குறித்த விவரம் பின்வருமாறு...
 
1. தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு 20% வரையில் தள்ளுபடி. 
 
2. எஸ்பிஐ வங்கி கார்ட் பயன்படுத்தி நாணயங்கள் வாங்குபவர்களுக்கு 10% கூடுதல் தள்ளபடி.
 
3. அமேசான் பே பேலன்ஸ் மூலம் நகை வாங்கினால் 15% கேஷ்பேக் ஆஃபர். 
 
4. வாங்கப்படும் தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு செய்கூலி இல்லை. 
 
5. ரூ.10,000 மேல் நகைகள் வாங்குபவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு.  
 
6. தங்கம் வாங்கும் 100 வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1 கிராம் தங்க நாணயம் இலவசம்.  
 
7. தங்க செயினுக்கு செய்கூலியில் 50% தள்ளுபடி.
 
8. 22 கேரட் 916 ஹால் மார்க் நகைகளுக்கு 15% கூடுதல் கேஷ் பேக் ஆஃபர்.