நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மீது ஏர்டெல் அதிரடி சலுகை!

Last Updated: செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:51 IST)
ஏர்டெல் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நோக்கியா 2 மற்றும் 3 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. 
 
நோக்கியாவின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல் ரூ.169 சலுகை வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.169 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் முதற்கட்டமாக முறையே ரூ.6,999 மற்றும் ரூ.9,499 செலுத்த வேண்டும். இதை தொடர்ந்து 36 மாதங்கள் தொடர்ச்சியாக ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ் செய்ய வேண்டும். 
 
இவ்வாறு செய்த பின்னர், முதல் 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 மற்றும் 36 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
 
நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:
 
# 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி LTPS  LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# 1 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா
# வாட்டர் ரெசிஸ்டண்ட், 4100 எம்ஏஎச் பேட்டரி
 
நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:
 
# 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
# 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா
# 2650 எம்ஏஎச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :