ரூ.9-க்கு ரீசார்ஜ்: ஜியோவை விட கீழ் இறங்கிய ஏர்டெல்!
ஜியோவுக்கு போட்டியாக சேவைகளை வழங்குவதற்காக ஏர்டெல் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம, ஜியோவின் ரூ19-க்கு போட்டியாக ஏர்டெல் ரூ.9-க்கு புதிய சேவை வழங்கியுள்ளது.
ஏர்டெல்லின் ரூ.9 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட்ட உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங், ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும், 100 எஸ்எம்எஸ் மற்றும் 100 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
ஆனால், ஜியோவின் ரூ.19 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 20 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் வழங்கும் ரூ.23 திட்டத்தில் அன்லிமிட்டெட் அழைப்புகள், 200 எம்பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோவுடன் ஒப்பிடும் போது ஏர்டெல்லின் சேவை சிறந்ததாக உள்ளது. இந்த புதிய திட்டம் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் கிடைக்கும். இது ஏர்டெல் காம்போ ஆஃபர் பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.