ரூ.4,900 கோடிக்கு கைமாறுகிறதா ஏர்டெல் நிறுவனம்?
வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் சிங்டெல் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஏர்டெல் ரூ.4,900 கோடி முதலீட்டை பெற திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தில் அதன் நிறுவனர் சுனில் பார்தி மிட்டலின் பங்கு 50% கீழ் குறையும் நிலை உருவாகும். வெளிநாட்டு நிறுவனத்தின் பங்கு 50% மேல் உயரும். இதனால் ஏர்டெல் வெளிநாட்டு நிறுவனமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.