செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 மே 2020 (16:25 IST)

50 ஜிபி எடுத்துகோங்க.. நஷ்டத்திலும் அள்ளி கொடுக்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

 
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மை இடட்தை மிடித்திருந்த ஏர்டெல் ஜியோவின் வருகைக்கு பின்னர் மீளா சரிவை எதிர்க்கொண்டு வருகிறது. அந்த இந்த காலாண்டின் முதல் 3 மாதத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  
 
ஆம், ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது.  
 
ஆனாலும் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், ரூ.5,237 கோடி பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நஷ்டம் இருக்கும் போதிலும் ரூ. 251 விலையில் புதிய சேவை அளிக்கப்பட்டுள்ளது. 
 
ரூ. 251 விலையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை வேலிடிட்டி இன்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயனர்கள் 50 ஜிபி டேட்டாவை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாம்.