மே 3 ஆம் தேதி வரை Internet Free...??
மே 3 ஆம் தேதி வரை தொலைதொடர்பு துறை இலவச இணையத்தை வழங்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இஅரண்டாம் கட்டமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. கடந்த ஊரடங்கின் போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை வழங்கியது.
எனவே இதனை பயன்படுத்தி இப்போது மே 3 வரை தொலைதொடர்புத் துறை அனைத்து பயனர்களுக்கும் இலவச இணையத்தை வழங்குவதாகக் கூறி ஒரு லின்க் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது போலியானது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.