ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:11 IST)

ரூ.49: ஜியோ vs ஏர்டெல்...

ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில், தற்போது மீண்டும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் புது சலுகையை வழங்கியுள்ளது. 
 
ரூ.49 விலையில் கிடைக்கும் இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
முன்னதாக ஏர்டெல் ரூ.49 விலையில் அறிவித்த சலுகையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.49 சலுகைக்கு போட்டியாக ஏர்டெல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜியோ சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
ஏர்டெல் சலுகையை மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பெற முடியும். இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின் ரீசார்ஜ் செய்யலாம். 
 
மேலும், 4ஜி ஸ்மார்ட்போனை அப்கிரேடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது.