1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. actress sonu sood ready to help people

போரால் தங்க இடம் இல்லையா?!.. என்னை காண்டாக்ட் பண்ணுங்க!.. உதவ முன்வந்த சோனு சூட்!..

sonu sood
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன.. ஈரான் அரசு அணு ஆயுதங்களை தயாரிக்கக்கூடாது என தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் நாட்டின் மீது கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தில் பலரும் இறந்தனர். அதோடு ஈரானில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கெல்லாம் பதிலடிகொடுக்கும் விதமாக அமெரிக்க இராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.. இதனால் சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட், லெபனான் ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள். துபாயில் விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது.

பலரும் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள்.. பலரும் விமான நிலையங்களில் தங்கியிருக்கிறார்கள்.. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான சோனு சூட் போர் காரணமாக துபாயில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவசமாக தங்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன்.. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறேன்.. உதவி தேவைப்பட்டால் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு DM  செய்யவும்’ என அறிவித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு அறிவித்த போது வட மாநிலத்தை சேர்ந்த பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது தனது சொந்தக் பணத்தில் பலரையும் அவர்களின் சொந்த ஊருக்கு சோனு சூட் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
நண்பேன்டா!.. இந்தியாவுக்கு 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் அனுப்ப ரெடி!.. ரஷ்யா அறிவிப்பு...