திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (13:59 IST)

ரூ.149 ரீசார்ஜ்: பழைய விலையில் புது ஆஃபர்....

ஜியோவின் வருகைக்கு பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்க துவங்கிவிட்டன. 
 
ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் சரிவில் இருந்து மீளவும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் போராடி வருகின்றனர். புதுப்புது அஃபர்களை வழங்கிவந்ததை நிறுத்திவிட்டு பழைய விலையில் புது சேவையை வழங்குவது டிரண்டாகி வருகிறது. 
 
அந்த வகையில், ஏர்டெல் தனது ரூ.149 பிரீபெயிட் திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறிப்பிட்ட சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்பட்டது. அதன்படி ரூ.149 ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா ஆகியவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
முன்னதாக இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா, ஏர்டெல் எண்களுக்கு மட்டும் வாய்ஸ் கால், ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற சலுகைகள்தான் ரூ.179 ரீசார்ஜ் திட்டத்திலும் வழங்கப்படுகிறது.