திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (15:52 IST)

ரூ.398 ரீசார்ஜ்: ஜியோ, ஏர்டெல், ஐடியா... சிறந்தது எது?

தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்தது முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் சரிவில் இருந்து மீளவும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் போராடி வருகின்றனர்.
 
ஜியோவின் வருகைக்கு பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்க துவங்கிவிட்டன. ஜியோ அளிக்கும் சேவைகளை போலவே மற்ற நிறுவனங்கள் தங்களது சேவையை வழங்குகின்றன. 
 
இந்நிலையில் தற்போது அனைத்து நிறுவனங்களும் ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல், ஜியோ, ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் ரூ.398 என்ற பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நிறுவனம் சிறந்த சேவையை வழங்குகிறது என காண்போம்...
 
# ஜியோ 70 நாட்கள் வேலிடிட்டியுடன், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாள்தோறும் 100 இலவச எஸ்எம்எஸ், இலவச உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்குகிறது. 
# ஏர்டெல் ரூ.398 இண்டர்நெட் பேக்-கில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன், 5 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. 
# ஐடியா 70 நாட்கள் வேலிடிட்டியுடன், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா, நாள்தோறும் 100 இலவச எஸ்எம்எஸ் இலவச உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்குகிறது.