1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (11:44 IST)

100% கேஷ்பேக் ஆஃபர்: ஜியோவை பயன்படுத்தி முன்னுக்கு வரும் ஏர்டெல்!!

100% கேஷ்பேக் ஆஃபர்: ஜியோவை பயன்படுத்தி முன்னுக்கு வரும் ஏர்டெல்!!
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் 100% கேஷ் பேக் ஆஃப்ரை அறிவித்தது. அதே போன்று தற்போது ஏர்டெல்லும் 100% கேஷ்பேக் ஆஃபரை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 


 
 
ஜியோ நிறுவனம் தீபாவளி சலுகையாக 100% கேஷ்பேக் வழங்கியது. ஆனால், அதன் பின்னர் தனது ரிசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
 
மேலும், மத மாதம் ஜியோ ரிசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்ற செய்தியும் பரவி வருவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஏர்டெல் பல திட்டங்களை தீட்டி வருகிறது.
 
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக ரூ.349 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகையை அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு அன்லிமிட்டட் அழைப்புகள், தினசரி 1GB டேட்டா வழங்கப்படும். 
 
இந்த சலுகையை இப்பொழுதே பயன்படுத்திக்கொண்டால் ரூ.299 செலுத்தினால் போதும். 
ஆனால், இந்த சலுகை பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.