டிட்லி புயலால் 57 பேர் உயிரிழப்பு - 131 வீடுகள் மூழ்கி ஒடிசா மாநிலம் தத்தளிப்பு

Last Updated: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:23 IST)
அண்மையில் மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த  டிட்லி புயல் வலுவடைந்து ஒடிசா-ஆந்திரா இடையே கரையை  கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான டிட்லி புயலால், ஒடிசா மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் டிட்லி புயலை சமாளிகக் முடியாமல்  தத்தளிக்கிறது  ஒடிசா மாநிலம்.
 
மேலும்  போக்குவரத்துக்கு சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து  மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 57 ஆக அதிகரித்துள்ளது. இந்த புயலால் இதுவரை  131 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கிறது  என  அம்மாநில சிறப்பு மீட்புப்படை கமிஷனர் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :