திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (08:59 IST)

ஆந்திராவில் முழு அடைப்பு: திருப்பதியில் தமிழக பக்தர்கள் தவிப்பு

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடந்து வருகிறது. ஆந்திர மாநில பேருந்துகள் ஓடவில்லை என்பதால் திருப்பதிக்கு சென்றுள்ள தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்களித்த மத்திய அரசு அதனை நிறைவேற்றாததால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் விலக்கி கொண்டது. மேலும் கடந்த 20ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையும் தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தோல்வி அடைந்தாலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இதில் தெரிந்தது
 
இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். இதன்படி இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.. இதனால் தமிழகத்திலிருந்து திருப்பதி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும், தமிழகத்திலிருந்து ஆந்திரா சென்ற பேருந்துகள் ஆந்திர எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.