ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. முக்கிய தொகுதிகள் 2019
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (07:48 IST)

எச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்!!!

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை போல தைரியமானவர் என கூறினார்.
 
தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இதனால் தேமுதிக திமுக மீது செம கடுப்பில் உள்ளது.
 
இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. அப்போது பேசிய அவர் விஜயகாந்தை போல் எச்.ராஜா மிகவும் தைரியமானவர். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். எதற்கும் பயப்படமாட்டார். 
 
இப்படி தைரியமாக பேசும் ஆட்களிடம் உண்மை இருக்கும். ஆகவே ஊழல் திமுக கூட்டணியை ஒழித்துக்கட்டிவிட்டு மக்கள் இவருக்கு ஓட்டு போடுங்கள் என கூறினார்.