வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (19:49 IST)

ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள் - பிரேமலதா விஜயகாந்த்

ஸ்டாலினை  தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள் - பிரேமலதா விஜயகாந்த்
ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குறைசொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் அவரை புறக்கணிக்கிறார்கள். எனவே அவரை குறைசொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின் என அழைப்போன் என்று தெரிவித்தார்.