நோய்களுக்கு பயன் தரும் ஓரிதழ் தாமரை...!!

Orithazh thamarai
Sasikala|
ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து  காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ்  தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.
ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்டவர்கள் உடலைத் தேற்ற ஓரிதழ் தாமரை சமூலத்தை (வேர் முதல் பூ வரை)  உண்பதன் மூலம் நிவாரணம் பெறலாம. இதே சலூலத்தை கஷாயம் செய்து குடித்து வந்தால் விஷக் காய்சலால் பாதிக்கப்பட்டவர்கள்  நிவாரணம் பெறலாம்.
 
ஆச்துமா நொய்யலிகளுக்கு இந்த கஷாயம் நல்லதொரு மருந்தாலும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கஷாயத்தை  அருந்தி கைமேல் பலன் பெறலாம்.
 
ஓரிதழ் தாமரையுடன் சமலவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு உருண்டையாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தாலும் மேலே  சொன்ன பிரச்சனைகள் தீரும்.
 
பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் வரக்கூடிய இந்த மேகவெட்டை நோய்க்கு ஓரிதழ்தாமரை சமூலம் பலன் தரும்.
 
ஆண்மைக் குறைபாடு, குழந்தையின்மை பிரச்சனை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரை  பலனளிக்கும்.
 
இலை, தண்டு, வேர், பூ, காய் என ஓரிதழ் தாமரையின் முழு சமூலத்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு தூங்கச்செல்வதற்குமுன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :