சிறுநீரின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிய...!!!

Urine colour
Sasikala|
நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு வேண்டாதவற்றை உடல் மலமாகவும் சிறுநீராகவும்  வெளியேற்றுகிறது.
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழியும். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழித்தால் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.
 
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 - 500 மி.லி. அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும்.
 
சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் வெள்ளை நிறமாக இருந்தால் - நீர்ச்சத்து  அதிகமாக இருக்கிறது. வெளிறிய மஞ்சள் - போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளது.
Urine colour

மஞ்சள் - உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது. பிரவுன் - கல்லீரல் தொற்று, பழைய இரத்தம். சிவப்பு அல்லது பின்க் - தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது. சிறுநீரக கோளாறு, புற்றுநோய். நீளம் அல்லது பச்சை - தவறான மருந்துகள் உட்கொள்ளுதல், உணவில் அதிகபடியான சாயம் கலப்பு.
 
சிறுநீர் கழிக்கும்போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு, சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி. சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
 
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன. காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :