எமதீபம் எதற்காக எப்போது ஏற்றவேண்டும் தெரியுமா...?
தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யமதீப திரயோதசி எனப் பெயர். அன்று மாலை எமதர்ம ராஜாவை வழிபட வேண்டும். அதாவது மண் அகலில் நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தல் வேண்டும்.
இந்த வழிபாடு அறியாமல் செய்த பாபவங்களையும், யம பயத்தையும் போக்கும். வீட்டில் எவ்வளவு நபர்கள் வசிக்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒவ்வொரு மண்விளக்கு வீதம் அவரவர்களைக் கொண்டே அகல் தீபங்களை தனது வீட்டு வாசலிலோ அல்லது அருகில் இருக்கும் ஆலயங்களிலோ ஏற்றி வைக்க வேண்டும்.
தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும். `பாசம் தண்டம் இவைகள் கைகளில் ஏந்திக் கொண்டு யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் ஸூர்யனின் புத்ரரான யம தர்மராஜாவானவர்.
நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் சந்தோஷமடையட்டும் என்று சொல்லி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இது அபம்ருத்யு என்னும் தோஷத்தைப் போக்கடித்து வியாதியற்ற நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது காந்த புராணம்.