வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (21:15 IST)

காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்-எம்.ஆர். விஜயபாஸ்கர்

vijayabaskar
கரூரில் தொடர்ந்து அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் என முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கரூரில் இன்று அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ் பி யிடம் புகார் மனு அளித்த அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் அவரது வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை மிகக் கொடுமையாக தாக்கியவர்களை நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவித்த நிலையில்
அது தொடர்பாக கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் துணை கண்காணிப்பாளர் நகர காவல் ஆய்வாளர் அனுமதி கேட்டு கடிதம் அளித்த நிலையில் நேற்றுவரை அனுமதிக்காத நிலையில் நீங்கள் நடத்திக் கொள்ளலாம் என வாய்மொழி உத்தரவு அளித்த நிலையில் இன்று காலை மாவட்ட கழக அமைத்தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு வழிச்சாலையாக இருக்கிறது ஒரு வழிச்சாலையில் உங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என கூறிய நிலையில்
நேற்று மாலை 5 மணி அளவில் காவல்துறை அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து காவல்துறை ஏவல் துறையாக வேலை செய்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதிமுகவினருக்கு மட்டும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலையாக உள்ளது.
திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழக்கு நிலையில் அதேபோன்று திமுகவினர் உண்ணாவிரதத்திற்கு சாலையை மறைத்து நடத்துகின்றனர் அதை இந்த காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கரூரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் இறந்த நிலையில் அதில் உண்மையான குற்றவாளிகளை இன்று வரை கைது செய்யாத நிலையில் அதில் சம்பந்தமில்லாத மூன்று நபர்களை கைது செய்தனர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாத காவல்துறை அதிமுக கூட்டம்,ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் காவல்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது மதுரை நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.