வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (18:58 IST)

கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

brazil
பிரேசில் நாட்டில் கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட    நபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் பல வகையான மீன்கள் உள்ளன. ஆனால், நாம் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது.

குறிப்பிட்ட சில வகையான மீன்களை மட்டுமே சாப்பிட முடியாது. இந்த நிலையில், விஷமுள்ள மீன் என்று தெரிந்தும் அதை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில்  நண்பர் ஒருவர் அளித்த  கொடிய விஷமுள்ள வகையைச் சேர்ந்த மீனை சமைத்துச் சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் என்ற நபர் உயிரிழந்தார்.

சையனைவிட 1200 மடங்கு விஷம் கொண்ட இந்த மீன் உண்பதற்கு தகுதியற்றது கூறப்படுகிறது.