’’ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கமாட்டார் ’’- விஜயகாந்த் மைத்துனர் சுதீஸ் !!!
தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிடத் தயார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அவரது சகோதரர் சுதீஸ் இன்று தர்மபுரியில் பேசும்போது, ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தவருடம் ஏப்ரம் மற்றும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜெயிக்க வேண்டி ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் எதிர்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனையுமான பிரேமலதா விஜயகாந்த் அடுத்த வருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளும் தேமுதிக போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸ் கூறியதாவது: தியேட்டர்கள் எல்லாம் தியேட்டர்களாக மாறி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாகக் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறிவரும் ரஜினிகாந்த் இனியும் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என தேமுதிக மாநில துணைச்செயலாளர் சுதீஸ் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.